சுவிட்சர்லாந்தில் அசாத் மீதான வழக்கு தள்ளுபடி? சிரிய ஜனாதிபதி அசாத் அல்ல
சிரியாவின் ஜனாதிபதியான பஷார் அல் அசாத் நாட்டிலிருந்து தப்பியோடி ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளதைப்போலவே, பிரான்சில் தஞ்சம் புகுந்த மற்றொரு அசாதைக் குறித்தது இந்த செய்தி.
அசாதின் சித்தப்பாவான அசாத்
சிரியாவின் ஜனாதிபதியான பஷார் அல் அசாதின் சித்தப்பா ரிஃபாத் அல் அசாத்.
1984ஆம் ஆண்டு, தன் சகோதரரான Hafezஇன் ஆட்சியைக் கவிழ்க்க முயன்று, தோற்ற ரிஃபாத் அல் அசாத், 37 ஆண்டுகளாக பிரான்சில் தஞ்சம் புகுந்திருந்தார்.
பிரான்சில் பண மோசடி வழக்கில் சிக்கிய அசாத், நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையிலிருந்து தப்புவதற்காக 2021ஆம் ஆண்டுமீண்டும் சிரியாவுக்குத் திரும்பினார்.
அசாத் மீதான வழக்கு தள்ளுபடியாகலாம்
இந்த அசாத், சிரியாவில் துணை ஜனாதிபதியாகவும், சிரிய ராணுவ தளபதியாகவும் இருந்தவர் ஆவார்.
அவர் போர்க்குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கெதிரான குற்றங்களுக்காக சுவிட்சர்லாந்தில் விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.
1982ஆம் ஆண்டு, சிரியாவில் பொதுமக்கள் மீதான தாக்குதலின்போது, அசாதின் ராணுவ வீரர்கள் ஹமா என்னுமிடத்தில், 10,000 முதல் 40,000 பேரை கொடூரமாக கொலை செய்தார்கள்.
அதனால் இந்த அசாதுக்கு ஹமாவின் கசாப்புக்கடைக்காரர் என்ற (the Butcher of Hama) பட்டப்பெயர் வழங்கிவருகிறது.
ஆனால், திடீரென, சுவிட்சர்லாந்தின் பெடரல் குற்றவியல் நீதிமன்றம் அசாத் மீதான வழக்கை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாக அறிவித்துள்ளது.
அசாதின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரால் பயணம் செய்ய முடியாது என்பதால் வழக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்துள்ளதாக சுவிஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |