உயிர் தப்புவது கடினம்... அசாதின் பிரித்தானிய மனைவிக்கு தடை விதித்த ரஷ்யா
சிகிச்சைக்காக லண்டன் திரும்ப இருந்த மிக மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள அஸ்மா அசாதுக்கு ரஷ்ய நிர்வாகம் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவுக்கு திரும்ப
கிளர்ச்சியாளர்கள் படை நாட்டைக் கைப்பற்றியதை அடுத்து ரஷ்யாவுக்கு குடும்பத்துடன் தப்பியிருந்தார் சிரியாவின் நீண்டகால ஜனாதிபதிகளில் ஒருவரான அசாத்.
ஆனால் ரஷ்யாவுக்கு தப்பியோடியதை கொஞ்சமும் விரும்பாத அசாதின் மனைவி, தமது பிறந்த நாடான பிரித்தானியாவுக்கு திரும்ப வேண்டும் என்ற முயற்சியில் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
லண்டனில் பிறந்த அஸ்மா சிரியாவில் குடியிருந்து வந்த நிலையில், அவரது பிரித்தானிய கடவுச்சீட்டின் காலாவதி 2020 செப்டம்பர் மாதம் முடிவடைந்ததாக கூறப்படுகிறது. ஆவணங்கள் எதுவும் புதுப்பிக்காத நிலையில், அவருக்கு லண்டன் திரும்பும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, அஸ்மா அசாத் லண்டன் திரும்ப அனுமதிக்கும் முடிவு உடல்நலக் காரணங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்க முடியாது என ரஷ்யா தெரிவித்துள்ளதாக பிரித்தானியாவின் உள்விவகார அமைச்சர் Yvette Cooper தெரிவித்துள்ளார்.
இரத்தப் புற்றுநோயால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அஸ்மா அசாத் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றே குறிப்பிடுகின்றனர். ஆனால், அஸ்மாவின் கடவுச்சீட்டை புதுப்பிக்க சிரியா அரசாங்கம் மறுப்பு தெரிவித்ததா அல்லது அவரே வாய்ப்பை தவறவிட்டாரா என்பதில் உறுதியான தகவல் இல்லை.
இனி இடமில்லை
சிரியாவின் மிக மோசமான உள்நாட்டுப் போருக்கு மத்தியில் 2012ல் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இரு தரப்பிலும் அவர் மீது தடை விதிக்கப்பட்டது.
ஏற்கனவே, அஸ்மா அசாதுக்கு பிரித்தானியாவில் இனி இடமில்லை என்பதை வெளிவிவகார அமைச்சர் David Lammy திட்டவட்டமாக குறிப்பிட்டிருந்தார்.
வெளியான தகவலின் அடிப்படையில், 2019ல் மார்பகப் புற்றுநோயில் இருந்து மீண்டுவந்த அஸ்மா, இந்த ஆண்டு மே மாதத்தில் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே, லண்டனில் இருதயநோய் நிபுணராக சிகிச்சை அளித்து வரும் அஸ்மாவின் தந்தை மருத்துவர் Fawaz Akhras மகளுக்காக ரஷ்யா புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |