+2-வில் அதிக மதிப்பெண்: 35,775 மாணவர்களுக்கு பரிசாக ஸ்கூட்டர் தரும் அரசு
அசாம் மாநிலத்தில் 12ம் வகுப்பு தேர்வில் அதிகம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற 35,775 மாணவர்களுக்கு ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்பட உள்ளது.
ஸ்கூட்டர் பரிசு
அசாம் மாநிலத்தில் டாக்டர் பனிகாந்தா ககாதி விருது என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு இலவசமாக ஸ்கூட்டர் வாகனம் வழங்கப்படுகிறது.
இதேபோல், உயர்கல்வியில் 75 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்ற பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.15,000 வழங்கப்படுகிறது.
12ம் வகுப்பு தேர்வில் அதிகம் மதிப்பெண்கள் பெற்ற 5,566 பேர் மாணவர்கள், 30,209 பேர் மாணவிகள் என்ற நிலையில் மொத்தம் 35,775 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிற நவம்பர் 30ம் திகதி அன்று ஸ்கூட்டர்கள் வழங்கப்பட உள்ளது.
இதேபோல் பத்தாம் வகுப்பில் 75 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்ற 27,183 மாணவர்களுக்கு தலா ரூ.15,000 நவம்பர் 29ம் திகதி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |