கருணைக்கொலைக்கு உதவிய பெண் செய்த தவறு: கொலைக் குற்றச்சாட்டு பதிவு
சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை அல்லது மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலைக்காக வந்திருந்த ஒரு முதியவர் தன் வாழ்வை முடித்துக்கொள்வதற்கு ஒரு செவிலியர் உதவியுள்ளார்.
பக்கவாதத்தால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்ட முதியவர்
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த அந்த முதியவர் தன் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பி, Bernஇலுள்ள கருணைக்கொலை மையமான Exitக்கு வந்துள்ளார்.
மருந்து கொடுக்கும்போது ஏற்பட்ட தவறு
அவரது சம்மதத்தைப் பெற்ற அந்த செவிலியர் உயிரை மாய்த்துக்கொள்ள உதவும் மருந்தை குளூக்கோஸ் ஏற்றும் குழாய் மூலம் அவரது கையிலுள்ள இரத்தக் குழாயில் செலுத்தியுள்ளார்.
சுமார் 20 நிமிடங்களுக்குப் பின் அவர் தற்செயலாக அந்த முதியவரைக் கவனிக்க, ஊசி ஏற்றப்பட்ட அவரது கை வீங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்துள்ளார். அதாவது, இரத்தக் குழாய்க்குள் செல்லவேண்டிய மருந்து, ஊசி விலகியதால் சதைப்பகுதிக்குள் செல்ல, அதனால் அவரது கையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.
உடனே, ஊசியைக் கழற்றி அடுத்த கையில் குத்தியுள்ளார் அவர்.
image - Pixabay
உண்மையில், அவர் அந்த ஊசியை அடுத்த கையில் குத்துவதற்கு அந்த முதியவரிடம் அனுமதி கோரியிருக்கவேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அந்த முதியவர் அதற்குள் சுய நினைவிழந்துவிட்டிருக்கிறார்.
இந்த கருணைக்கொலையைப் பொருத்தவரை, அந்த செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் நோயாளியிடம் ஒப்புதல் பெற்றுக்கொண்டே இருக்கவேண்டும்.
ஆகவே, அந்த முதியவரின் ஒப்புதல் இல்லாமல் அந்த செவிலியர் அந்த ஊசியை அடுத்த கையில் குத்தியதால், அவர் மீது கொலைக்குற்றச்சாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.