வியக்க வைக்கும் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியின் சொத்து மதிப்பு! எவ்வளவு? வெளிச்சம் போட்டு காட்டிய போர்ப்ஸ்
பிரித்தானியா இளவரசர் ஹரி-மேகன் தம்பதியின் நிகர சொத்து மதிப்பு வியக்கத்தக்க வகையில் குறைவாகவும் இல்லாமல், அதிகமாகவும் இல்லாமல் நடுநிலையானது என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, இளவரசர் ஹரி-மேகன் தம்பதி பிரித்தானியா அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகினர், நிதி ரீதியாக சுயாதீனமாக்குவதற்காக இந்த முடிவை எடுத்ததாக ஹரி-மேகன் தம்பதி கூறினர்.
முன்னதாக, தம்பதியரின் செத்து பல்லாயிரக்கணக்கானதாக இருக்கலாம் என்று அறிக்கைகள் சுட்டிக்காட்டின, ஆனால் போர்ப்ஸின் கூற்றுப்படி, அவர்களின் நிகர மதிப்பு பிரபலங்களின் தரங்களால் மிதமானதாகக் கருதப்படுகிறது.
ஹரி மட்டும் தனது மறைந்த தாய் இளவரசி டயானாவிடமிருந்து 10 மில்லியன் டொலர் பெற்றார் என்று போர்ப் குறிப்பிட்டுள்ளது.
அதே நேரத்தில் மேகன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் தனது வேலையின் மூலம் 2 மில்லியன் டொலர் ஈட்டியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்குச் சென்றபின், தம்பதியினர் கலிபோர்னியாவின் சாண்டா பார்பரா கவுண்டியில் 14.7 மில்லியன் டொலருக்கு மாளிகையை வாங்கியுள்ளனர்.
அவர்கள் அதற்காக 5 மில்லியன் டொலர் செலுத்தினர், இப்போது கிட்டத்தட்ட 10 மில்லியன் டொலர் அடமானம் வைத்திருக்கிறார்கள்.
கூடுதலாக, இந்த ஜோடி 17 ஆம் நூற்றாண்டின் அரச மாளிகையான Frogmore Cottage-ஐ புதுப்பிக்க செலவழித்த 3 மில்லியன் டொலர்களை திருப்பி அளித்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு Frogmore Cottage-ல் குடியேற ஹரி-மேகன் தமப்தி முடிசெய்திருந்துனர் என்பது நினைவுக் கூரத்தக்கது.
தற்போது இளவரசர் ஹரி-மேகன் தம்பதியிடம் வெறும் 4 மில்லியன் டொலர்கள் தான் இருப்பதாக போர்ப்ஸ் மதிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த ஜோடி பல இலாபகரமான ஒப்பந்தங்களைப் பெற்றபின் தங்கள் சொத்து மதிப்பை அதிகரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spotify உடனான மூன்று ஆண்டு podcast ஒப்பந்தம் 15 முதல் 18 மில்லியன் டொலர் வரை மதிப்புடையதாக இருக்கும் என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் கடந்த செப்டம்பரில் கையெழுத்திட்ட Netflix உடனான ஒப்பந்தம் மூலம் 100 மில்லியன் டொலர் வரை வருமானம் ஈட்டக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.
முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கும் போது இளவரசர் ஹரி-மேகன் தம்பதி அவர்களின் பிரபல அந்தஸ்தின் மூலம் பயனடைவதாக போர்ப்ஸ் அறிக்கை கூறுகின்றன.
கடந்த வசந்த காலத்தில் மியாமியில் நடந்த தனியார் ஜே.பி. மோர்கன் உச்சி மாநாட்டில் பேசியதற்கு இளவரசர் ஹரி 1 மில்லியனை டொலர் பெற்றதாகக் கூறப்படுகிறது.