73 பிரித்தானியர்கள் உயிரிழக்க காரணமாக இருந்த தடுப்பூசி... இரத்தக்கட்டிகள் உருவாகும் மர்மம் வெளியானது
ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி எதனால் இரத்தக்கட்டிகளை உருவாக்குகிறது என்பதை பிரித்தானிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
பிரித்தானிய தயாரிப்பான ஆஸ்ட்ராசெனகா நிறுவன கொரோனா தடுப்பூசியால் இதுவரை 73பிரித்தானியர்கள் உயிரிழந்துள்ளார்கள்.
ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொள்பவர்களுக்கு இரத்தக்கட்டிகள் உருவாகுவதாக தெரியவந்ததையடுத்து, பிரித்தானியாவில் 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அந்த தடுப்பூசியைப் பெற பிரித்தானியா கட்டுப்பாடுகள் விதித்தது. பல ஐரோப்பிய நாடுகள் அத்தடுப்பூசிக்கு தடை விதித்தன. அமெரிக்காவோ, எங்களுக்கு ஒரு டோஸ் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி கூட வேண்டாம் என்று கூறிவிட்டது.
இந்நிலையில், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெறுவோருக்கு எதனால் இரத்தக்கட்டிகள் உருவாகின்றன என்பதைக் கண்டறிவதற்காக பிரித்தானிய அரசு Cardiff பலகலைக்கழக அறிவியலாளர்கள் தலைமையிலான ஒரு குழுவை நியமித்தது.
அந்தக் குழு, எதனால் இரத்தக்கட்டிகள் உருவாகின்றன என்பதை தற்போது கண்டுபிடித்துள்ளது. அதாவது, தடுப்பூசியின் உறை போன்று (shell) செயல்படும் பகுதி, (அது வலுவிழக்கச் செய்யப்பட்ட ஜலதோஷ வைரஸ் ஆகும்) கொரோனாவை செயலிழக்கச் செய்வது எப்படி என செல்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டிய நிலையில், அதுவே சில நேரங்களில் காந்தம் போல செயல்பட்டு, மனிதனுடைய இரத்தத்தில் காணப்படும் இரத்தத் தட்டுகள் (platelets) என்னும் செல்களை கவர்ந்திழுக்கின்றதாம்.
இந்த இரத்தத் தட்டுகள்தான் ஒருவருக்கு காயம் பட்டு இரத்தம் வெளியேறும்போது, அந்த இரத்தம் உறைவதில் முக்கிய பங்காற்றும் செல்கள் ஆகும்.
அவை எதனால் இப்படி திடீரென இரத்தத்தட்டுகளை கவர்ந்திழுக்கின்றன என்பது தெரியவில்லை. (அதை கண்டுபிடிக்கும் முயற்சியையும் அறிவியலாளர்கள் துவக்கியுள்ளார்கள்).
இப்படி அந்த தடுப்பூசியின் உறை போன்ற பகுதி இரத்தத்தட்டுகளை கவர்ந்திழுக்க, அவை அந்த உறையின் மீது ஒட்டிக்கொள்ள, இந்த புதிய அமைப்பை ஆபத்து என கருதும் மனிதனுடைய உடல், உடனடியாக அதை அழிக்க ஆன்டிபாடிகளை உருவாக்கத் தொடங்குகிறது.
இந்த ஆன்டிபாடிகளும், தடுப்பூசியின் உறை போன்ற பகுதி மற்றும் இரத்தத்தட்டுகள் சேர்ந்த புதிய உருவமும் சேர்ந்து கட்டிகளாக மாற, அவைதான் அபாயமான இரத்தக்கட்டிகள் என அறியப்படுகின்றன.
அறிவியலாளர்கள் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி அபூர்வமாகத்தான் இரத்தக்கட்டிகளை உருவாக்குகிறது என்கிறார்கள். அதாவது, 100,000 பேரில் ஒருவருக்கும் குறைவானவரே இந்த பிரச்சினையால் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறினாலும், பிரித்தானியாவில் மட்டும் 426 பேர் இந்த இரத்தக்கட்டிகளால் பாதிக்கப்பட்டு, 73 பேர் உயிரிழந்துவிட்டதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
தற்போது இந்த இரத்தக்கட்டிகள் உருவாதல் குறித்து மேலும் அறிவதற்காக ஆய்வுகள் நடத்தி வரும் அறிவியலாளர்கள், இந்த பிரச்சினையை குறைக்க தடுப்பூசியில் முன்னேற்றங்கள் செய்ய முடியுமா என்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022