பிரான்சில் இந்த தடுப்பூசி போட்டுக் கொண்ட மேலும் இரண்டு பேர் மரணம்! கடும் அச்சத்தில் இருக்கும் மக்கள்
பிரான்சில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டு பேர் மேலும் மரணமடைந்துள்ளதால், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து இருந்து வருவதால், இந்த வைரஸிடம் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள ஒரே வழி தடுப்பூசி தான், இதன் காரணமாகவே ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை எடுத்து கூறி, மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இப்படி போடப்படும் தடுப்பூசிகளால், சிலருக்கு கடும் பக்க விளைவுகள் ஏற்படுகிறது. ஆனால் அவை எல்லாம் மிகவும் அரிதானவரை என்று கூறப்படுவதால், மக்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரான்சில், AstraZeneca தடுப்பூசி போட்டுக்கொண்ட மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த தடுப்பூசி போட்டுக் கொள்வதால், thrombosis எனும் நாளங்களில் இரத்தம் உறைதல் எனும் மிக அரிதான பக்கவிளைவு ஏற்படுகின்றது.
இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி ஒருவரும், கடந்த 6-ஆம் திகதி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
பிரான்சில் இந்த AstraZeneca தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 34 பேருக்கு இந்த நாளங்களில் இரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 11 பேர் இந்த பக்கவிளைவினால் உயிரிழந்துள்ளனர்.
ஆனால் பிரான்சில் இதுவரை 4,068,000 பேர் AstraZeneca தடுப்பூசியினை போட்டுக்கொண்டுள்ளதால், இந்த தடுப்பூசி போட்டுக் கொண்ட பலரும், நமக்கு எதுவும் ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.