இந்திய கால்பந்து அணியை தெரிவு செய்ய ஜோதிடர் நியமனமா? - கேள்வி எழுப்பிய சு.வெங்கடேசன்
இந்தியாவின் கால்பந்து அணியை தேர்வு செய்வதற்கு ஜோதிடரை நியமனம் செய்துள்ளீர்களா? என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கேள்வி எழுப்பிய சு.வெங்கடேசன்
நாடாளுமன்றத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சரிடம், இந்தியக் கால்பந்து குழு வீரர்களை தேர்ந்தெடுக்க அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு ஜோதிடர் ஒருவரின் பணியை பயன்படுத்தியுள்ளதாக வந்துள்ள செய்தி அரசுக்கு தெரியுமா?
தெரியும் எனில் விவரங்களை தாருங்கள்... இப்படிப்பட்ட செயல்பாடுகள் இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் கெடுத்து விடாதா?
இது குறித்து அரசு ஏதேனும் அறிவுரைகளை அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு வழங்கியுள்ளதா? என்று நட்சத்திரக் கேள்வி எண் 38/05.12.2023 வாயிலாக சு. வெங்கடேசன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய கால்பந்து குழு வீரர்கள் தேர்வுக்கு ஜோதிடர் நியமிக்கப்பட்டாரா?
— Su Venkatesan MP (@SuVe4Madurai) December 10, 2023
இது போன்ற செயல்பாடு இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் கெடுத்து விடாதா?
என்ற எனது கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் “ இப் பிரச்சினை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த விவரங்களை அரசு… pic.twitter.com/zdXLNJgsFs
அதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் அனுராக் சிங் தாகூர்,
இப் பிரச்சினை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (எ) ராகுல் மேரா மற்றும் இதரர் வழக்கு (எண் 3047-48 : 2022) தொடர்புடையது; உச்ச நீதிமன்ற ஆணையின்படி தாக்கல் செய்யப்பட்டுள்ள தடய தணிக்கை அறிக்கை வரம்பிற்குள் வரக் கூடியது; உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு சட்ட ஆலோசகர் அந்த அறிக்கையை சீல் இடப்பட்ட உறையில் தந்துள்ளார்; எனவே இது குறித்த விவரங்களை அரசு பகிர்ந்து கொள்ள இயலாது என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |