தேர்தலில் நின்ற பிரபல ஜோதிடரின் மனைவி தோல்வி: எழுந்துள்ள விமர்சனம்
Renowned astrologer who tells everyone’s fortune sees wife lose: மற்றவர்களுடைய எதிர்காலத்தைக் கணிக்கும் பிரபல ஜோதிடர் ஒருவர், தன் மனைவியின் எதிர்காலம் குறித்து கணிக்கத் தவறிவிட்டதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரபல ஜோதிடரான இந்து பிரகாஷ் மிஷ்ராவின் மனைவி ஸ்மிதா மிஷ்ரா. ஸ்மிதா, சமீபத்தில் லக்னோ பட்டதாரி தொகுதி சட்டமேலவை (MLC) தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார்.
பிரபல ஜோதிடரின் மனைவி தோல்வி
ஆனால், தேர்தலில் ஸ்மிதா தோல்வியடைந்துவிட்டார். அவருக்கு 300 வாக்குகள் கூட கிடைக்கவில்லை!

ஸ்மிதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவரது கணவரான இந்து பிரகாஷ் மிஷ்ரா மீது சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
மற்றவர்களுடைய எதிர்காலத்தைக் கணிக்கும் இந்து பிரகாஷ் மிஷ்ரா, தன் மனைவி தேர்தலில் தோல்வியடைந்துவிடுவார் என்பதை கணிக்கத் தவறிவிட்டார் என்னும் ரீதியில் பலரும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.