இந்த வயதில் தனுஷ் உச்சத்திற்கு செல்வார்; அனிருத் திருமணத்தை கணித்த ஜோதிடர் சொன்ன தகவல்
tarot card reader predicts dhanush will be in peak at 40-50 age: அனிருத் திருமணம் குறித்து கணிப்பு தெரிவித்த ஜோதிடர், 40 முதல் 50 தனுஷ் உச்சத்திற்கு செல்வார் என தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் அரசியல் வருகை
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வர உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
அதை உறுதிப்படுத்தும் வகையில், தனுஷ் ரசிகர்கள் மன்றத்தை சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்ததோடு, ரசிகர்கள் மன்றத்தை, நற்பணி இயக்கமாக மாற்றினார்.

அதேவேளையில், ஏற்கனவே புதிய அரசியல் கட்சியின் பெயரை தனுஷின் சார்பில் தேர்தல் கமிஷனில் பதிவு செய்திருப்பதாகவும், 'தமிழக எழுச்சிக் கழகம்' என்று கட்சிக்கு பெயர் சூட்டியிருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இது தொடர்பாக அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இன்று காலை டெல்லி சென்றுள்ள அவர், அங்கு முக்கிய பிரமுகர்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இசையமைப்பாளர் அனிருத் - காவ்யா மாறனுக்கு திருமனம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அனிருத் ஒளிபரப்புத் துறையைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொள்வார் என்று டாரட் கார்டு பார்த்து, ஜோதிடர் ஜெயஸ்ரீ 10 ஆண்டுகளுக்கு முன்பே அனிருத்திடம் கூறிய வீடியோ வைரலாகியது.
50 வயதுக்கு பின் பெரிய வளர்ச்சி
இதே போல், அதே நிகழ்ச்சியில் தனுஷின் எதிர்காலம் குறித்து டாரட் கார்டு பார்த்து, ஜோதிடர் ஜெயஸ்ரீ கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதில் பேசிய அவர், "நீங்க நிறைய விஷயம் கற்றுக்கொள்வீர்கள், கற்றுக்கொண்ட பிறகு தான் அதற்குள் போவீர்கள். சொன்னதை செய்யலைன்னா கோவம் வரும்.

50 வயதிற்கு பிறகு பெரிய வளர்ச்சி இருக்கும். 40 முதல் 50 காலக்கட்டத்தில் அவர் உச்சத்தில் இருப்பார், எல்லா துறைகளிலும். நிறைய சவால்கள் இருக்கும். நிறைய எதிரிகளும் வருவார்கள்" என தெரிவித்துள்ளார்.
தனுஷின் அரசியல் வருகை குறித்து முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ரதன் பண்டிட் வெற்றிவேலிடம் ஒரு நிகழ்வில் கேள்வி எழுப்பப்பட்டது
இதற்கு பதிலளித்த அவர், "என்ன பொறுத்தவரைக்கும் ஒருவேளை தனுஷ் அரசியலுக்கு கமிட் ஆயிட்டாருன்னு வச்சுக்கோங்க. அதன் பின்னர் திமுக, அதிமுக இருக்காது. அந்த நம்பர் 2 இடத்திற்கு தனுஷ் வந்துருவாரு.
அவர் ஜாதகத்தை நான் பர்சனலா பார்த்திருக்கேன். அரசியல் அனுபவம் தேவையே இல்லை. ரிஸ்க் எடுக்க தனுஷ் சார் தயாரா இருந்தா 2031ல இது விஜய் சார் வெர்சஸ் தனுஷ் சார்ன்னு மாறும்" என தெரிவித்துள்ளார்.
தனுஷுக்கு தற்போது 43 வயதாகியுள்ள நிலையில், அடுத்த நாடாளுமன்ற தேர்தலின்(2029) போது 45 வயதையும், அடுத்த சட்டமன்ற தேர்தலின்(2031) போது 48 வயதையும் எட்டுவார்.