AI அமைச்சர் வெறும் தொடக்கமே - செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் குறித்து எச்சரிக்கும் ஜோதிடர்
AI யின் எதிர்கால ஆதிக்கம் குறித்து ஜோதிடர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். +
AI ஆதிக்கம்
AI என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு, நாளுக்கு நாள் அனைத்து துறைகளிலும் அதன் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
புகைப்படங்கள் உருவாக்குவது தொடங்கி, கோடிங் எழுதுவது என அனைத்து வேலைகளையும் AI செய்து வருகிறது. சில நிறுவனங்கள், ஊழியர்களை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக AIயை பயன்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில், அல்பேனியா தனது அமைச்சரவையில் AI அமைச்சரை அறிமுகப்படுத்தியது. இது அரசின் டெண்டர்களை கவனித்து கொள்ளும், இதன் மூலம் ஊழல் ஒழிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில், AI யின் வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும் போது, பல துறைகளில் மனிதர்கள் வேலையிழப்பை எதிர்கொள்வார்கள் என்ற அச்சம் மக்களிடையே உள்ளது.
AI குறித்து ஜோதிடரின் எச்சரிக்கை
இந்நிலையில், AI தொழில்நுட்பத்தின் எதிர்கால ஆதிக்கம் குறித்து Numrovani நிறுவன தலைமை ஜோதிடர் சித்தார்த் எஸ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "தற்போதைய இந்த AI தாக்கம் எதிர்காலத்தில் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் வர உள்ளது. AI யால் அனைவரும் ஈர்க்கப்படும் நிலையில், செயற்கை நுண்ணறிவுக்கும் அசலுக்கு இடையேயான வேறுபாடுகள் குறைந்து வரும்.
வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ள காதல், டேட்டிங், திருமணம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றில் AI அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.
மீன ராசியில் சனியின் சஞ்சாரம் மற்றும் மேஷம், மிதுனம், கடகம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகளில் குருவின் இருப்பு ஆகியவற்றின் காரணமாக அடுத்த 12 முதல் 18 மாதங்களில் AI ஒரு வீட்டு உபயோகப் பொருளாக மாறிவிடும்.
2027 ஆம் ஆண்டில், AI ஆசிரியர்களாக, நண்பர்களாக, கார் முதல் வீட்டு உபயோக பொருட்கள், சாதனங்கள், சேவைகள் என அனைத்திலும் இணைக்கப்படும்.
AI ஒரு இயல்பான எதிர்பார்ப்பாக மாறி, வேலைகளை செய்ய பயன்படுத்தப்படும். 2028 ஆம் ஆண்டுக்கு முன்னர், AI பாரிய வளர்ச்சியை அடையும்.
அது சிக்கல்களுக்கு தீர்வு வழங்குவதோடு இல்லாமல், படைப்பாற்றல் மிக்க, உணர்ச்சி ரீதியாக விழிப்புணர்வு பெற்ற ஒன்றாக மாறும்.
2028 மற்றும் 2031 க்கு இடைப்பட்ட காலத்தில், நடக்கும் அடுத்த பாரிய போர், தரவு மற்றும் AI உதவியுடன் நடைபெறும். AI வீரர்கள் முன்கள பாதுகாப்பாக போர் களங்களில் இருப்பார்கள். நாடுகளின் மேலாண்மை அதன் AI நிபுணத்துவதால் தீர்மானிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |