ஒரு வீட்டில் கதவு சரியாக இருந்தாலே பல தோஷங்கள் நீங்கும் - ஜோதிடர் பவானி ஆனந்த் நேர்காணல்
ஒரு வீட்டில் கதவு சரியாக இருந்தாலே பல தோஷங்கள் நீங்கும் என்று ஜோதிடர் பவானி ஆனந்த் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
குலதெய்வத்தின் அனுக்கிரகத்தை எப்படி பெறுவது என்றால், பூஜை அறையில் நம்மை பார்த்தார்போல ஒரு சின்ன கண்ணாடி வைக்கலாம். மகாலட்சுமியை வெளியில் பார்த்தார்போல் வைக்கக்கூடாது செல்வம் போய்விடும்.
நம் வீட்டிற்குள் வரக்கூடிய நுழைவு வாயில் சின்ன சந்தனத்தை தடவி கைக்கூப்பி வணங்கலாம். கதவு நம்மை காப்பாற்றுகிறது. கதவு குலதெய்வத்திற்கு சமம். கதவை நாம் மதிக்கிறதே கிடையாது. சில வீட்டில் கதவு திறந்தாலே சத்தம் வரும்.
அதற்கு சிறிது எண்ணெய் விட்டு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நமக்கு தோணாது. ஒரு வீட்டில் கதவு சரியாக இருந்தாலே பல்வேறு தோஷங்கள் சரியாகும். படிக்கட்டு நம்மை படிப்படியாக முன்னேற்றுகிறது. அதையும் நாம் மதிக்க மாட்டோம்.
இது குறித்து மேலும் அறிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்...