புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் பணமழை கொட்டப்போகும் 3 ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா?
ஜோதிடத்தில் உள்ள கிரகங்கள் ராசியில் மாற்றம் ஏற்படும்போது ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும். கடந்த மார்ச் 31ம் தேதி முதல் புதன் மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார்.
கடந்த ஏப்ரல் 21ம் தேதி மேஷ ராசியில் வக்ர நிலையில் புதன் பயணிக்கத் தொடங்கினார். இதனையடுத்து வரும் 15ம் தேதி புதன் மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து, நேர் பாதையில் பயணிக்க இருக்கிறார்.
இதனால், நற்பலன்கள் மெதுவாக இருக்கும். வரும் மே 15ம் தேதி முதல் புதன் மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால், அதனுடைய தாக்க மஅனைத்து ராசிகளிலும் கிடைக்கும்.
இருந்தாலும், இந்த 3 ராசிக்காரர்களுக்குதான் புதன் திடீர் பண வரவையும், அதிர்ஷ்டத்தையும் கொடுக்க உள்ளார்.
அந்த 3 ராசிக்காரர்களைப் பற்றி பார்ப்போம் -
மிதுனம்
மிதுன ராசிகாரர்களுக்கு 11வது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைய உள்ளார். இதனால், இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வருமானம் கிடைக்க உள்ளது. மேலும், பழைய தொழிலில் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்க உள்ளது. நிறைய இன்பங்களை பெற உள்ளனர். வாகனம் அல்லது சொத்து வாங்க வாய்ப்பு உள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிகாரர்களுக்கு 9வது வீட்டில் புதன் வக் நிவர்த்தி அடைய உள்ளார். இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. தொழில் தொடர்பான பயணங்களில் நல்ல வருமானம் கிடைக்க உள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபகரம் கிடைக்க உள்ளது.
மீனம்
மீன ராசிகாரர்களுக்கு 2வது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைய உள்ளார். இதனால், இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கப் போகிறது. திடீரென்று பண வரவும் கிடைக்க உள்ளது. நிதி நிலைகளில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கொடுக்கும் காலம் இது. ஆனால், ஏழரை சனி நடைபெற்று வருவதால், சனியின் தாக்கத்தைக் குறைக்க, சனி பகவானை வழிபட்டு வர வேண்டும்.