அடிக்கடிக்கு இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்லதா, கெட்டதா? அறிவோம்...
Astrology
By Nandhini
நாம் சில சமயங்களில் ஆழ்ந்து தூங்கும்போது நல்ல கனவுகள், கெட்ட கனவுகளும் வருவதுண்டு. சிலர் தூங்கும்போது இறந்து போவதுபோலவும், மேலே இருந்து கீழே குதிப்பது போலவும், பாம்பு கொத்துவது, விபத்து நடப்பது போன்ற கெட்ட கனவுகளும் வரும். அதேபோல் கல்யாணம் நடப்பது, குழந்தை பிறப்பது போன்ற கனவுகளும் வருவதுண்டு.
பஞ்சாங்க சாஸ்திரங்களில் கனவு, பலன்களில் கனவு குறித்து சில குறிப்புகள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அது என்னவென்றால், நாம் தூங்கும்போது சில கனவுகள் பலித்துவிடுமாம்.
சரி... இறந்தவர்கள் கனவில் வந்தால் நமக்கு நல்லதா? கெட்டதா? என்று நாம் அறிந்து கொள்வோம் -
- நாம் தூங்கும்போது இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்திகள் கிடைக்குமாம். நம்முடைய ஆயுளும் அதிகரிக்குமாம்.
- நம் கனவில் இறந்தவர்கள் நமக்கு ஆசி கொடுப்பது போல் கனவு வந்தால் நல்லதுதானாம்.
- நம் கனவில் இறந்தவர்களிடம் நம்மிடம் பேசுவது போல் கனவு வந்தால், பெயர், புகழ் அதிகரிக்குமாம்.
- நம் தூக்கத்தில் இறந்தவர்கள் நம் வீட்டில் தூங்குவது போன்ற கனவு வந்தால் நமக்கு வரப்போகும் பெரிய கண்டத்திலிருந்து தப்பித்துவிடுவோமாம்.
-
நம் கனவில் சவப்பெட்டியில் இறந்தவர்கள் இருந்தால் நமக்கு நெருங்கியவர்கள் இறக்கப்போகிறார்கள் என்று அர்த்தமாம்.
- இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுதார்கள் என்றால், நல்லது கிடையாதாம். உடனே கோவிலுக்கச் சென்று அர்ச்சனை செய்ய வேண்டுமாம்.
- நம் தூக்கத்தில் நம்முடன் இறந்தவர்கள் சேர்ந்து சாப்பிட்டால் நமக்கு செல்வ செழிப்பும் உண்டாகப்போகுதாம்.
- நம்முடைய ஆழ்ந்த தூக்கத்தில் நாம் இறந்து விட்டது போன்ற கனவு வந்தால், நமக்கு ஆயுள் அதிகரிக்குமாம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US