ஆடி மாதம் ஞாயிற்று கிழமைகளில் அம்மனை எப்படி வழிபட வேண்டும்?
ஆடி மாதம் தொடங்கிவிட்டாலே கோவில்களில் திருவிழா கோலம்தான். மேலும், ஆடி மாதம் வந்துவிட்டாலே அடுத்தடுத்து பண்டிகை காலம் தொடங்கி விடும். ஆடி மாதத்தை கர்கடக மாதம் என்று சொல்வார்கள்.
அதாவது சூரிய குரு புணர்பூசம் 4ம் பாதத்தில் நுழையும்போது கடகராசியில் சூரியன் செல்வதே ஆட மாத துவக்கம் என்று கூறுவார்கள். ஆனால், ஆடி மாதமும், மார்கழி மாதமும் சுபகாரியங்கள் நடத்த ஏற்ற மாதங்கள் கிடையாது. இந்த மாதங்களை பீடை மாதங்கள் என்று சொல்வது தவறான விஷயம். இந்த மாதம்தான் இறைவழியில் நம்மை அழைத்துச் செல்லும் மாதம்.
சரி ஆடி மாதம் ஞாயிற்று கிழமைகளில் அம்மனை எப்படி வழிபட வேண்டும் என்று பார்ப்போம் -
ஆடி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் விசேஷமான நாட்களாகும். ஞாயிறுதோறும் அம்மனுக்கு கூழ் காய்ச்ச உகந்த நாளாக கருதப்படுகிறது.
மேலும் ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னதானமும் செய்வார்கள். கூழ் மற்றும் முருங்கைக்கீரை பொரியல், காராமணி குழம்பு, வாழைக்காய், கத்திரிக்காய், இவைகளோடு சில பேர் வீடுகளில் கொழுக்கட்டையும் செய்து ஏழை எளிய மக்களுக்கு தானமாக கொடுப்பார்கள்.
இதனால், பல மடங்கு புண்ணியம் நம் குடும்பத்தில் சேரும் என்று நம்பப்படுகிறது. 5 வாரங்களில் எந்த ஞாயிற்றுக்கிழமை உங்களுக்கு உகந்த கிழமையோ அன்று நீங்கள் தானம் செய்யலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |