மஹாலக்ஷ்மியின் அருள் பரிபூரணமாக கிடைக்க இதை செய்யுங்கள்
மஹாலக்ஷ்மியின் அருள் பரிபூரணமாக கிடைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வாஸ்து நிபுணர் T.சரவணா தேவி IbC Bhakthi நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சஷ்டி ஸ்ரீ.T.சரவணா தேவி அவர்கள் பேசுகையில்,
வடக்கு திசை என்பது காம்பவுண்ட்டுக்கும் வீட்டிற்கும் இடையில் காலி இடங்கள் அதிகமாக இருக்க வேண்டும். மற்ற திசைகளை விட தாழ்வாக இருக்க வேண்டும்.
காம்பவுண்டு எதிரே ரோடு இருக்கலாம். வீட்டிற்கு வடக்கு வாசலாக இருந்தால், வடக்கு எதிரில் ரோடு இருக்கலாம். அப்படி இல்லையென்றால் வடக்கில் ஒரு வீடு இருக்கலாம். அந்த வீடு எதிரில் காலி மனை இருக்கும். அப்போது நம் வீடு பள்ளமாக இருக்கிறதா என்பதை நாம் பார்க்க வேண்டும். வடக்கு என்பது பொருளாதாரம்.
தங்க நகை, தொழில் மற்றும் சொத்து மூலம் அங்கு என்ன வருமானம் வருகிறது என்பதை வடக்கு திசை வைத்துள்ளது. கூடுதலாக அந்த வடக்கு திசையில் வடகிழக்கு, வடமேற்கு இரண்டும் இருப்பதால், அந்த வடமேற்கு என்பது உறவுகள், ரத்தம் சம்பந்தமாக அல்லது வேலை செய்பவர்கள் திருட்டு வேலை செய்தால் அந்த வடமேற்கு, வடகிழக்கில் பிரச்சினை இருக்கும்.
ஒவ்வொரு வீடு தோறும் உப்பு தீபம் ஏற்ற வேண்டும். மகாலட்சுமியின் இன்னொரு அம்சம் இந்த கல் உப்பு. இந்த உப்போட பயன்பாடு வீட்டில் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் வீடுகளில் இந்த உப்பு தீபத்தை ஏற்ற வேண்டும்.
இந்த உப்பு தீபம் எப்படி ஏற்ற வேண்டும் என்பது குறித்தும் மேலும் தகவல் தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்...