பரிகாரம் என்பது வாழ்க்கையை மாற்றாது - ஜோதிடர் ராஜநாடி கா.பார்த்திபன் நேர்காணல்
பரிகாரம் என்பது வாழ்க்கையை மாற்றாது என்று ஜோதிடர் ராஜநாடி கா.பார்த்திபன் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் ராஜநாடி கா.பார்த்திபன்
உங்கள் ஜாதகத்தில் இன்றைக்கு கிரகங்கள் எங்கு போவது என்பது கோச்சாரம். அதைத்தான் பெயர்ச்சி என்று சொல்கிறார்கள். நிறையபேர் அவசரப்பட்டு திருமணம் செய்வதால் விவாகரத்து ஆகிறது.
விவாகரத்து ஆவது விதி என்றால், இருந்தாலும் அவசரப்படாமல் இருந்தால் அந்தப் பிரச்சினையில் அவர்கள் மாட்டிக்க மாட்டார்கள். நிறைய பேர் என்னிடமே வந்து அழுது இருக்கிறார்கள். எப்ப கல்யாணம் ஆக வேண்டும் என்று ஜோதிடர்களிடம் சென்று கேளுங்கள். அதற்காக காத்துக்கொண்டிருங்கள்.
நம் உடம்பில் பிரச்சினைகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எப்படி உடற்பயிற்சி செய்கிறோமோ... அதுபோல் தெய்வ பக்தி வேண்டும்.
உங்கள் கண்ணுக்கு எந்தக் கோவில் தெரிகிறதோ அந்த கோவிலுக்குச் சென்று வழிபடுங்கள். குறிப்பிட்ட நேரம் இல்லாமல் பிரசவத்தில் குழந்தையை வயிற்றிலிருந்து அறுத்து எடுப்பார்கள். அதை செய்யவே கூடாது. விதியை நாம் எதிர்த்து போராடக்கூடாது.