முருகன் மீது காதல் வந்தது எப்படி? Actress Vilasini Interview
முருகன் மீது காதல் எப்படி வந்தது என்று நடிகை விலாசினி நேர்காணலில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
ஒவ்வொருமுறையும் நான் விழும்போது எனக்கு கை கொடுத்தது கடவுள் மட்டும்தான். இந்த பிரபஞ்சம் என்ன சொல்கிறது என்பதை பொறுமையாக கேளுங்கள்.
தன்னம்பிக்கையை நாமக்குள் கொண்டு வருவது கடவுள்தான். மனிதர்களிடம் சொன்னால் நீ இப்படிப்பட்ட ஆளா என்று கேட்பார்கள். ஆனால் கடவுள்கிட்ட மட்டும்தான் நம் உள்ளத்தில் உள்ளதை சொல்ல முடியும். கடவுளிடம் அமர்ந்து பேசும்போதுதான் நமக்கு மனநிம்மதி கிடைக்கும். அப்போது நமக்கு தெளிவு கிடைக்கும். கடவுள் நம்முடன் கூடவே இருக்கிறார். இருந்து அந்த விஷயத்தை கேட்கிறார்.
நிச்சயமாக நமக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை வரும். முருகன் என்றால் என்னவேண்டுமானாலும் செய்வேன். என் வாழ்க்கையில் நிறைய ஆனந்த கண்ணீரை பார்த்திருக்கிறேன்.
கோவில் நான் எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்திருக்கும்போது ஒரு குட்டி குழந்தை, பட்டுப்பாவாடையில் வந்து ஏய்.. எனக்கெல்லாம் சாப்பாடு கொடுக்க மாட்டீய்யா என்று கேட்டது. உடனே நான் அந்த குழந்தையை திரும்பிப் பார்த்தேன். அப்படியே அலறிட்டேன். ஏன்னா.. அந்த குழந்தை முகம் தெய்வீக கலையோடு இருந்தது. இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள் -