பரிகாரங்கள் யாருக்கு பலிக்காது? ஜோதிடர் அகில் சித்தார் நேர்காணல்
பரிகாரங்கள் யாருக்கு பலிக்காது? என்று பல சுவாரஸ்யமான தகவல்களை ஜோதிடர் அகில் சித்தார்த் நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
வாய் என்ற கதவை மூடினால் வாய்ப்பு என்ற கதவு திறக்கும். ஒன்று வேண்டும் என்றால் ஒன்றை இழக்க வேண்டும். வெற்றி பெற்றவர்களின் வெற்றி மட்டும்தான் தெரிகிறது. ஆனால், அதற்காக அவர்கள் என்ன தியாகம் செய்தார்கள் என்று தெரியுமா? ஒருவேளை விரதம் இருங்கள். அந்த ஒரு வேளை விரதத்திற்கு கண்டிப்பாக பலன்கள் உண்டு. மனிதனுடைய சாஸ்திரப்படி ஆயுட்காலம் 120 வருடங்கள். அவரவர் கர்மாவின் அடிப்படையில் முன், பின் இறந்து விடுகிறார்கள்.
கோவில்களில் பரிகாரம் செய்ய வேண்டும் என்றால், 5 நாட்கள் மாமிசம் சாப்பிடலாம் ஒருவேளை விரதம் இருந்து, மது குடிக்காமல், தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருந்து கடவுளை வணங்கி, பரிகாரம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவது ரொம்ப கஷ்டம். சரிந்து கீழே விழுவது சுலபம்.
இது தொடர்பாக மேலும் தெரிந்து கொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள் -