ஆடி மாதத்தில் குலதெய்வத்திற்கு எப்படி மாவிளக்கு வழிபாடு நடத்த வேண்டும்ன்னு தெரியுமா?
ஆடி மாதம் தொடங்கி விட்டது. இதனால் அம்மன் கோவில்களில் தினமும் திருவிழாதான். ஆனால், ஆடி மாதத்தில் எந்த அளவிற்கு அம்மனை வணங்குகிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய குல தெய்வத்தையும் வணங்க வேண்டும்.
அப்போதுதான் வீட்டில் செல்வ செழிப்பு பெருகும். பிரச்சினைகள் நீங்கும். அதிலும் முக்கியமாக நம் குல தெய்வங்களுக்கு மாவிளக்கு வழிபாடு நடத்த வேண்டும்.
மாவிளங்கு வழிபாடு எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் -
கால் கிலோ பச்சரிசியை நன்கு ஊற வைக்க வேண்டும். ஊறிய பச்சரிசியை மிக்ஸியில் நன்றாக மாவாக்க வேண்டும். மாவான பச்சரிசியை வெல்லம் போட்டு நன்கு கெட்டியாக உருட்டும் பதத்திற்கு கொண்டு வர வேண்டும்.
பின்னர், உருண்டையின் நடுவில் ஒரு குழி தோண்டி, அதை அம்மன் சந்நிதியில் நேராக வைத்து, நுனி அம்மனின் இடப்பக்கம் வருமாறு போட்டு மாவு உருண்டைகளை வைக்கவேண்டும். குழியில், நெய்யை ஊற்றி, திரியை வைத்து தீ ஏற்ற வேண்டும்.
நான்கு பக்கமும், மஞ்சள், சந்தனம், குங்குமமிட்டு, பூ வைத்திருக்கும் இடத்தில், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழத்தை வைக்க வேண்டும்.
மேலும், தேங்காயை உடைத்து இரு புறமும் வைக்க வேண்டும். விளக்கு திரி நன்கு எரிய வைக்க வேண்டும். எரிந்து முடிந்ததும், அத்திரியை எடுத்துக் கொண்டுச் சென்று கோயிலில் இருக்கும் விளக்குகள் ஏதாவதொன்றில் அணையாமல் வைக்க வேண்டும்.
இதன் பின்னர், தண்ணீரால் சுற்றி கற்பூர ஆராத்தி எடுக்க வேண்டும்.
இப்படி நாம் குல தெய்வத்திற்கு மாவிளக்கு போட்டால் நமக்கு பல நன்மைகள் தேடி வரும். திருமண தடைகள் நீங்கும், வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயரும், புகழும் பெருவீர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |