கமெராவில் சிக்கிய பிரபல சிஇஓ! அம்பலமான ரகசிய உறவு..வைரல் வீடியோ
அமெரிக்காவின் ஆஸ்ட்ரோனோமர் நிறுவனத்தின் சிஇஓ தனது காதலியுடன் பொதுநிகழ்ச்சியில் சிக்கியது இணையத்தில் வைரலாகியுள்ளது.
Astronomer CEO
நியூயார்க்கில் அமைந்துள்ள ஆஸ்ட்ரோனோமர் (Astronomer) என்ற டெக் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருப்பவர் ஆன்டி பைரோன் (Andy Byron).
The CEO of one of the largest tech companies in the world was just caught on camera having an affair with his head of HR 🤦🏻♂️ pic.twitter.com/dv13Xg2SDv
— Matt Wallace (@MattWallace888) July 17, 2025
இவர் சமீபத்தில் கோல்ட்பிளே என்ற இசைக் கச்சேரியில் பங்கேற்றார். அவருடன் சக பணியாளர் பெண் கிறிஸ்டன் காபொட் இருந்துள்ளார்.
இருவரும் உற்சாகமாக கொண்டாட்டத்தில் இருக்கும்போது கமெரா அவர்களின் பக்கம் திரும்ப, பெரிய திரையில் தெரிந்தனர்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத ஆன்டி பைரோன் கீழே உட்கார்ந்துகொண்டார். கிறிஸ்டன் காபொட் பின்னால் திரும்பி தனது முகத்தை மறைத்துக் கொண்டார்.
ரகசிய உறவில்
ஏனெனில் அவர்கள் இருவரும் ரகசிய உறவில் இருந்துள்ளனர். ஆனால் இந்த வீடியோவால் அவர்களின் உறவு பொதுவெளியில் அம்பலமானது. மேலும் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த நிகழ்வு அந்நிறுவனத்தில் இருக்கும் டாக்சிக் ஓர்க் கலாச்சாரம் குறித்த விவாதத்தையும் எழுப்பியுள்ளது.
எனினும் ஆண்டி அல்லது அவரது நிறுவனம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |