வானியலாளர்களின் புதிய கண்டுபிடிப்பு - கருந்துளை நட்சத்திரம்
Astronomers discover rare Black Hole Star: வானியலாளர்களின் 'கருந்துளை நட்சத்திரம்' என்ற புதிய பொருளை கண்டுபிடித்துள்ளனர்.
வானியலாளர்கள், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST) மூலம், MoM-BH-1 எனப்படும் மிகப் பிரகாசமான சிவப்பு புள்ளியை கண்டறிந்துள்ளனர்.
இது பெரு வெடிப்பிற்கு (Big Bang) பிறகு 660 மில்லியன் ஆண்டுகளில் உருவானதாகக் கூறப்படுகிறது.

முதலில் இது ஒரு சாதாரண நட்சத்திரம் போலத் தோன்றியது. ஆனால், அதன் ஒளி அளவீடுகள், எந்த நட்சத்திரமும் செய்ய முடியாத தன்மைகளை வெளிப்படுத்தின.
ஆய்வாளர்கள், இது ஒரு இளம் கருந்துளை மிகப் பெரிய அடர்த்தியான ஹைட்ரஜன் வாயுவில் மூடப்பட்டிருப்பதாகவும், அந்த வாயு குவியல் காரணமாக நட்சத்திரம் போல பிரகாசிக்கிறது என்றும் விளக்குகின்றனர்.
இந்த “கருந்துளை நட்சத்திரம்” என்ற புதிய வகை பொருள், JWST கண்டுபிடித்த “சிறிய சிவப்பு புள்ளிகள்” (Little Red Dots) எனப்படும் மர்மமான வானியல் பொருட்களை விளக்க உதவுகிறது. இவை, ஆரம்ப காலத்தில் கருந்துளைகள் எவ்வாறு மிக வேகமாக வளர்ந்தன என்பதற்கான சான்றாகக் கருதப்படுகின்றன.
ஆய்வில், MoM-BH-1-இன் ஒளி அளவீட்டில் Balmer Break எனப்படும் மிக வலுவான ஹைட்ரஜன் உறிஞ்சல் மற்றும் வெளிப்பாடு கண்டறியப்பட்டது.
இது சாதாரண நட்சத்திரங்களில் காணப்படாத அளவிற்கு வலுவானது. இதன் மூலம், கருந்துளை நட்சத்திரம் என்ற புதிய வகை வானியல் பொருள் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு, பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தில் உருவான சூப்பர் மாஸிவ் கருந்துளைகள் எவ்வாறு மிக வேகமாக வளர்ந்தன என்பதற்கான விளக்கமாகவும், வானியலின் முக்கிய புதிர்களைத் தீர்க்கும் வழியாகவும் பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |