Asus நிறுவனத்தின் புதிய ROG Phone 9 ஸ்மார்ட்போன்! இந்தியாவில் வெளியாவது எப்போது?
Asus விரைவில் நவம்பர் 19 அன்று ROG Phone 9 தொடரை Snapdragon 8 Elite சிப்புடன் வெளியிட உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற Snapdragon கூட்டத்தில் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை Asus வெளிப்படுத்தியது.
91Mobiles தகவலின்படி, நவம்பர் 19ம் திகதி வெளியாகும் Asus ROG Phone 9 விவரங்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் Phantom Black மற்றும் Storm White என ஆகிய இரண்டு வண்ணங்களில் வெளியாகும்.
Powered by Snapdragon@ 8 Elite, the ROG Phone 9 Series is Coming Soon!
— ROG Global (@ASUS_ROG) October 21, 2024
Join us live, November 19, 12:00 PM CET
?https://t.co/DewzmoTYsX#ROGPhone9 #AiOnGameOn pic.twitter.com/jwVMRNgHXm
அத்துடன் முன்புறம் hole-punch வடிவமைப்பும், பின்புறம் மூன்று கேமரா வடிவமைப்பும் கொண்டு இருப்பதோடு Republic of Gamers என்ற வாக்கியமும் இடம்பெற்று இருக்கும்.
சிறப்பம்சங்கள்
திரை மற்றும் செயல்பாடு
6.78-இன்ச் Full HD+ (1080x2400 பிக்சல்கள்) Samsung Flexible LTPO AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு மற்றும் ஆல்வேஸ்-ஆன்-திரை(always-on-display) திரை கொடுக்கப்பட்டுள்ளது.
2,500 நிட்ஸ் உச்சக்கட்ட பிரகாசம், HDR10, உள்-திரை கைரேகை(in-display fingerprint) மதிப்பீடு ஆகியவை உள்ளது.
Snapdragon 8 Elite சிப்புடன் இயக்கப்படும் இது 16GB LPDDR5X RAM மற்றும் 512GB UFS 4.0 சேமிப்பு ஆகியவை கொண்டுள்ளது.
கேமரா
50MP Sony IMX700 முதன்மை கேமரா, 13MP அல்ட்ரா-வைட் கேமரா, 5MP மேக்ரோ கேமரா ஆகியவை கொண்டுள்ளது.
பற்றரி
5,800mAh பற்றரி திறன், 65W வயர்டு வேகமான சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது.
பிற அம்சங்கள்
Android 15-அடிப்படையிலான ROG UI மற்றும் Game Genie கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5mm ஜாக், மூன்று மைக்ரோஃபோன்கள்Bluetooth 5.3, Wi-Fi 7, NFC, NavIC, GPS, 5G ஆகியவை Asus-இன் ROG Phone 9 ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |