கிரிக்கெட் வரலாற்றில்... புதிய சாதனை படைத்துள்ள தமிழக வீரர் அஸ்வின்
இடது கை துடுப்பாட்ட வீரர்களுக்கு கடும் சவாலாக விளங்கும் அஸ்வின், 200 முறை அவர்களை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோருக்குப்பின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் திகழ்ந்து வருகிறார். இந்திய ஆடுகளத்தில் துடுப்பாட்ட வீரர்களுக்கு அஸ்வின் எப்போதுமே சிம்ம சொப்பனமாக இருப்பார்.
குறிப்பாக இடது கை துடுப்பாட்ட வீரர்களை மிக அதிக அளவில் திணறடிப்பார். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.
ஜோ ரூட், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 முறை இடது கை துடுப்பாட்ட வீரர்களை வீழ்த்தியுள்ள சாதனையை படைத்துள்ளார் அஸ்வின்.
இதுவரை எந்தவொரு பந்து வீச்சாளரும் இத்தனை முறை இடது கை துடுப்பாட்ட வீரர்களை வீழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.