ஜேர்மனியில் பாதியாக குறைந்த புகலிடக்கோரிக்கைகள்: அமைச்சர் விளக்கம்
ஜேர்மனியில், 2025ஆம் ஆண்டில் புகலிடக்கோரிக்கைகள் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது.
பாதியாக குறைந்த புகலிடக்கோரிக்கைகள்
ஜேர்மனியில், 2023ஆம் ஆண்டில் புகலிடம் கோரியவர்கள் எண்ணிக்கை 329,120. 2024ஆம் ஆண்டில் புகலிடம் கோரியவர்கள் எண்ணிக்கை 229,751.

Credits: Reuters
2025ஆம் ஆண்டிலோ, புகலிடக்கோரிக்கைகளின் எண்ணிக்கை 113,236 மட்டுமே. 2024ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, புகலிடக்கோரிக்கைகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது.
எல்லையிலேயே புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்புதல், குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி மறுப்பு, விரைவு குடியுரிமை விண்ணப்பங்களை முடிவுக்குக் கொண்டுவந்தது மற்றும் புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்புதல் என தனது புலம்பெயர்தல் கொள்கைகளை கடுமையாக்கிவருகிறது ஜேர்மனி அரசு.

Credits: Reuters
ஆக, ஜேர்மனியின் கடுமையான புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளே புகலிடக்கோரிக்கைகள் எண்ணிக்கை வீழ்ச்சியடையக் காரணம் என ஜேர்மன் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர் (Alexander Dobrindt) தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் புலம்பெயர்தல் கொள்கை மாறியுள்ளது என்னும் விடயம் மீதமுள்ள உலகின் பாகங்களை எட்டியுள்ளது என்பதற்கு, ஜேர்மனியிலிருந்து வெளியாகியுள்ள தெளிவான அறிகுறி இது என்று கூறியுள்ளார் அவர்.
பாதுகாப்புக் கோராதவர்கள் ஜேர்மனிக்கு வரக்கூடாது, குற்றவாளிகளாக மாறினவர்கள் ஜேர்மனியிலிருந்து வெளியேறவேண்டும் என்றும் கூறியுள்ளார் அவர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |