பிரித்தானியாவில் மிதவைப்படகில் தங்கவைக்கப்பட்டிருந்த புகலிடக்கோரிக்கையாளர்களில் ஒருவர் பலி
புகலிடக்கோரிக்கையாளர்களை ஹொட்டல்களில் தங்கவைப்பதால் ஆகும் செலவைக் குறைப்பதற்காக, அவர்களை மிதவைப்படகுகளில் தங்கவைக்க பிரித்தானிய அரசு முடிவு செய்தது.
மிதவைப்படகுகள்
பல்வேறு தரப்பிலிருந்தும் இந்த மிதவைப்படகுத் திட்டத்துக்கு எதிர்ப்பு வந்தும், Bibby Stockholm என்ற பெயர் கொண்ட மிதவைப்படகில் புகலிடக்கோரிக்கையாளர்கள் சிலர் தங்கவைக்கப்பட்டார்கள்
தொண்டு நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த Nicola David என்பவர், அந்த மிதவைப்படகு 222 பேர் மட்டுமே தங்கும் வசதிகொண்டது என்றும், அதில் மிக அதிக எண்ணிக்கையிலானவர்கள் தங்கவைக்கப்பட இருப்பதாகவும் கவலை தெரிவித்திருந்தார்.
PA
அத்துடன், படகில் லைஃப் ஜாக்கெட்கள் இல்லையென்றும், தண்ணீரில் நிற்கும்போது படகில் தீப்பற்றினால் எப்படி தீயை அணைப்பது என்பதுபோன்ற பிரச்சினைகள் உள்ளதாகவும் கூறப்பட்டது.
பின்னர், படகில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் லீஜியோனெல்லா என்னும் நோய்க்கிருமிகள் இருப்பது தெரியவந்ததால், படகிலிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு, இரண்டு மாதங்களுக்குப் பின் அக்டோபரில் மீண்டும் படகுகளில் ஏற்றப்பட்டார்கள்.
புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் பலி
இந்நிலையில், அந்த மிதவைப்படகில் தங்கவைக்கப்பட்டிருந்த புகலிடக்கோரிக்கையாளர்களில் ஒருவர் பலியாகிவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
Dorset என்னுமிடத்திலுள்ள Portland துறைமுகத்தில் அந்த படகு நிறுத்தப்பட்டுள்ளது.
எதனால் அந்த புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்தார் என்பது குறித்த தகவல் இன்னமும் வெளியாகவில்லை. பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |