சுவிட்சர்லாந்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவர் புகலிடக்கோரிக்கையாளர்: வெளியான புதிய தகவல்கள்
புதன்கிழமை மாலை சுவிட்சர்லாந்தில் திடீரென கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் குறித்து கூடுதல் தகவல்கள் சிலவற்றை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
பொலிசார் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்
புதன்கிழமை மாலை, சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணத்தில் திடீரென ஒருவர் பொதுமக்களை கத்தியால் தாக்கத் துவங்கினார். அந்தத் தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள அந்த 43 வயது நபர் ஸ்பெயின் நாட்டவர் என்றும், அவர் புகலிடக்கோரிக்கை விண்ணப்பம் ஒன்றை அளித்ததாகவும், பின்னர் அதை திரும்பப் பெற்றுக்கொண்டதாகவும் தற்போது பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவர் சில நாட்களுக்கு முன்புதான் சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ளார். அவருக்கு மன நல பாதிப்பு இருக்கக்கூடும் என கருதும் அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |