சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி
சுவிட்சர்லாந்தில், 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் புகலிடம் கோரியவர்கள் எண்ணிக்கை 16 சதவிகிதம் குறைந்துள்ளது.
புகலிடம் கோருவோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி
2026ஆம் ஆண்டின் முதல் பாதியில், 9,734 பேர் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளார்கள். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது 16 சதவிகிதம் குறைவு ஆகும்.

அதேபோல, 2026ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் மட்டும், 1,777 பேர் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளார்கள். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது 20 சதவிகிதம் குறைவு ஆகும்.
இந்த தகவலை, புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம் வெளியிட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் புகலிடம் கோரியுள்ளவர்களில் ஆப்கன் நாட்டவர்கள் 456 பேர், எரித்ரியா நாட்டவர்கள் 222 பேர், அல்ஜீரியா நாட்டவர்கள் 175 பேர், துருக்கி நாட்டவர்கள் 140 பேர் மற்றும் சோமாலியா நாட்டவர்கள் 139 பேர் ஆவர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |