புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அவசர பாதுகாப்பு தேவை: அகதிகள் அமைப்புகள் கோரிக்கை
பிரித்தானியாவில் வெடித்த வன்முறையின்போது புகலிடக்கோரிக்கையாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அவசர பாதுகாப்பு தேவை என அகதிகள் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஹமாஸ் தாக்குதலைப்போல இஸ்ரேல் மீது மீண்டும் ஒரு தாக்குதலுக்குத் தயாராகும் அமைப்பு: அதிகரிக்கும் பதற்றம்
தாக்குதலுக்குள்ளான புகலிடக்கோரிக்கையாளர் ஹொட்டல்கள்
பிரித்தானியாவில் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பரப்பட்ட தவறான செய்திகளால், நாடுமுழுவதும் வன்முறை வெடித்தது.
குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தியவர் புகலிடக்கோரிக்கையாளர் என தவறான தகவல் பரவியதால், பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஹொட்டல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
கட்டிடங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், தீவைப்பு சம்பவங்களும் நிகழ்ந்தன. சில இடங்களில், ஹொட்டல்களில் தங்கியிருந்த புகலிடக்கோரிக்கையாளர்களே தீயை அணைக்கும் சம்பவங்களும் நிகழ்ந்தன.
அகதிகள் அமைப்புகள் கோரிக்கை
இந்நிலையில், ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அவசர பாதுகாப்பு தேவை என அகதிகள் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
50க்கும் மேற்பட்ட அகதிகள் ஆதரவு அமைப்புக,ள் உள்துறைச் செயலரான Yvette Cooperக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு வலதுசாரியினரால் மேலும் தாக்குதலுக்குள்ளாகும் அபாயம் இருக்கலாம் என்பதால், அவர்களுக்கு அவசர பாதுகாப்பு தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
புகலிடக்கோரிக்கையாளர்களை ஹொட்டல்களிலிருந்து வெளியேற்றும்போது தாக்குதல்களுக்குள்ளாவதிலிருந்து அவர்களை பாதுகாப்பதை உறுதி செய்யவேண்டும் என்றும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், புகலிடக்கோரிக்கையாளர்களை ஹொட்டல்களில் தங்கவைக்கும் நடைமுறைக்கு முடிவுகட்டவேண்டும் என்றும், அவர்களை மக்களுடன் சமுதாயத்தில் தங்கவைக்கவேண்டும் என்றும் அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |