நூற்றுக்கும் மேற்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்: பொலிசார் குவிப்பு
பிரித்தானியாவில் இரண்டு புகலிடக்கோரிக்கை மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
கலவரத் தடுப்பு பொலிசார் அங்கு குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பரபரப்பு உருவாகியுள்ளது.
புகலிடக்கோரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்
இங்கிலாந்திலுள்ள, Harmondsworth மற்றும் Brook House ஆகிய இடங்களில், பிரித்தானியா மற்றும் பிரான்சின் ‘one in, one out’ திட்டத்தின் கீழ் புகலிடக்கோரிக்கை மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேலான புகலிடக்கோரிக்கையாளர்கள் நேற்று இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அங்கு கலவரத் தடுப்பு பொலிசார், பாதுகாப்பு கவசங்கள், மோப்ப நாய்கள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளுடன் குவிந்ததைத் தொடர்ந்து பரபரப்பு உருவானது.
பிரான்ஸ், அதற்குப் பிறகு வேறு ஏதேனும் ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றிற்கும் பின்னர் தங்கள் சொந்த நாட்டுக்கும் தாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டு அனுப்பப்படுவது குறித்தும், தங்கள் எதிர்காலம் குறித்தும் தாங்கள் கவலைப்படுவதாக அந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |