புகலிடக்கோரிக்கையாளர்களை மீண்டும் மிதக்கும் சிறைக்கு அனுப்பவேண்டும்: பிரித்தானிய சுகாதாரச் செயலர் வலியுறுத்தல்
புகலிடக்கோரிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்ட மிதக்கும் படகுகளில் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலைமையிலும், மீண்டும் அவர்களை அந்தப் படகுகளுக்கே அனுப்பவேண்டும் என்று கூறியுள்ளார் பிரித்தானிய சுகாதாரச் செயலர்.
மிதக்கும் சிறையில் பயங்கர நோய்க்கிருமிகள்
தொண்டு நிறுவனங்களும் எதிர்க்கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையும் மீறி, Bibby Stockholm எனப்படும் மிதவைப்படகுகளில் 39 புலம்பெயர்ந்தோர் ஏற்றப்பட்டனர்.
ஆனால், மிதக்கும் சிறை என அழைக்கப்படும் அந்த மிதவைப்படகில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் நோய்க்கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
புலம்பெயர்ந்தோர் ஏற்றப்பட்ட படகிலுள்ள தண்ணீரில் கண்டுபிடிக்கப்பட்ட நோய்க்கிருமியின் பெயர் Legionella ஆகும். இந்த பாக்டீரியா Legionnaires disease என்னும் ஒருவகை நிமோனியா போன்ற நோயை உருவாக்கும்.
Yahoo Canada Style
நுரையீரலுக்குள் நுழையும் இந்த நோய்க்கிருமி, இருமல், மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சலை உருவாக்கும். பாதிக்கப்பட்டவர்களில் சிலர் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
இந்த விடயம் வெளியானதைத் தொடர்ந்து, படகிலிருந்த 39 புலம்பெயர்ந்தோரும் வெளியேற்றப்பட்டு மீண்டும் ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர்.
பிரித்தானிய சுகாதாரச் செயலர் வலியுறுத்தல்
இந்நிலையில், நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையிலும், மீண்டும் புகலிடக்கோரிக்கையாளர்களை அந்த மிதவைப்படகுகளில் ஏற்றவேண்டும் என்று கூறியுள்ளார் தற்போதைய பிரித்தானிய சுகாதாரச் செயலரான Steve Barclay.
இது குறித்து பேசிய அவர், கடந்த வியாழக்கிழமை அந்த படகில் நோய்க்கிருமிகள் இருப்பதாக உள்துறை அலுவலக அமைச்சர்களுக்கு தகவலளிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் தக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளார்கள் என தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளார்.
Sky News
இப்படி அந்த படகு குறித்து சர்ச்சை நிலவும் நிலையிலும் அதில் மீண்டும் புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றவேண்டுமா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ஆம், அவர்கள் மீண்டும் படகில் ஏற்றப்படவேண்டும், ஏனென்றால், ஹொட்டல்களில் அவர்களைத் தங்க வைப்பதற்கு நாளொன்றிற்கு சுமார் 6 மில்லியன் பவுண்டுகள் செலவாகிறது.
பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது எப்படி அவசியமோ, அதேபோல, வரி செலுத்தும் மக்கள் மீது 6 மில்லியன் பவுண்டுகள் வரிச்சுமையை சுமத்துவதைத் தவிர்க்க வேண்டியதும் அவசியம் என்று கூறியுள்ளார் பிரித்தானிய சுகாதாரச் செயலரான Steve Barclay.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |