இந்திய ராணுவத்தின் தாக்குதல் திறனை அதிகரிக்கும் DRDO: ATAGS பீரங்கிகளுக்கு ஸ்மார்ட் குண்டுகள் தயாரிப்பு
இந்திய ராணுவத்தின் தாக்குதல்திறன் விரைவில் மேலும் மேம்பட உள்ளது.
அதற்கான அடித்தளமாக, ATAGS (Advanced Towed Artillery Gun System) பீரங்கிகளுக்கு 80 கிலோமீற்றர் தூரம் வரை தாக்கும் திறன் கொண்ட குண்டுகள் (Smart Ammo) தயாராகிறது.
DRDO-வின் ARDE (Armament Research and Development Establishment) பிரிவு, உள்ளூர் தொழில்நுட்பத்தில் Smart Ammo உருவாக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தற்போதைய ATAGS, 48 கிமீ வரை எதிரியைத் தாக்கும் திறன் கொண்டது. தற்போது "Bourrelet" வகை அம்மோ உருவாக்கப்படுகின்றது. இதனால் துல்லியமும், செயல்திறனும் மேம்படும்.
அடுத்த கட்டமாக GPS மற்றும் NavIC வழிநடத்தும் guided shells உருவாக்கப்படுகின்றன. இதை 2027-க்குள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, 80 கிமீ தூரத்துக்கு மேலாக தாக்கக்கூடிய Ramjet propulsion அம்மோக்களும் உருவாக்கப்படுகின்றன. இது ATAGS மட்டுமின்றி, Dhanush, K9 Vajra-T போன்ற 155 mm துப்பாக்கிகளிலும் பயன்படுத்த இயலும்.

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி
இந்த உயர் நவீன shells-க்காக Precision Guidance Kit உள்ளிட்ட வழிநடத்தும் (navigation) உபகரணங்கள் பொருத்தப்படும். 2029-க்குள் Ramjet shells தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ராணுவத்திற்காக ரூ.6,900 கோடியில் 307 ATAGS களத்துப்பாக்கிகள் மற்றும் 327 gun-towing வாகனங்களை Bharat Forge மற்றும் Tata Advanced Systems நிறுவனங்களிடமிருந்து வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முதல் ATAGS ரெஜிமென்ட் 2027 மார்ச் மாதத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
ATAGS DRDO smart ammo, ATAGS 80 km range India, Ramjet artillery shell India, Indian Army guided artillery, DRDO ATAGS GPS shell, ATAGS 155mm range upgrade