அவுஸ்திரேலிய அணிக்கு பயத்தை காட்டிய 23 வயது வீரர்! 274 ஓட்டங்கள் இலக்கு
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 274 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்தது.
அதிர்ச்சி கொடுத்த அடல்
லாகூரில் நடந்து வரும் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாடியது.
குர்பாஸ் டக்அவுட் ஆக, 22 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இப்ராஹிம் ஜட்ரானும் வெளியேறினார்.
அதன் பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் விக்கெட்டை இழக்க, 23 வயது இளம்வீரரான செதிகியுல்லா அடல் (Sediqullah Atal) அவுஸ்திரேலிய பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டார்.
ஓமர்சாய் ருத்ரதாண்டம்
நிதானமாக ஓட்டங்களை சேர்த்த அவர் சிக்ஸர்களை பறக்கவிடவும் தவறவில்லை. சிக்ஸர் அடித்து அரைசதம் கடந்த அவர், 95 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 85 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த அஸ்மதுல்லா ஓமர்சாய் (Azmatullah Omarzai) ருத்ரதாண்டம் ஆடினார். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 273 ஓட்டங்கள் எடுத்தது. ஓமர்சாய் 5 சிக்ஸர்களுடன் 67 ஓட்டங்கள் விளாசினார்.
அவுஸ்திரேலியாவின் ட்வர்ஷுய்ஸ் 3 விக்கெட்டுகளும், ஸ்பென்ஸர் ஜான்சன் மற்றும் ஆடம் ஜம்பா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |