தினமும் 7 ரூபாய் முதலீடு செய்தால் ஓய்வு காலத்தில் மாதம்தோறும் வருமானம்.., என்ன திட்டம் தெரியுமா?
மத்திய அரசு கொண்டு வந்த 'அடல் பென்ஷன் யோஜனா' (Atal Pension Yojana) திட்டத்தை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
அடல் பென்ஷன் யோஜனா
ஓய்வுபெறும் மூத்தகுடி மக்களுக்கான திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. அந்தவகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய 'அடல் பென்ஷன் யோஜனா' (Atal Pension Yojana) திட்டத்தை பார்க்கலாம்.
தொழிலாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த நபர்களுக்கான திட்டமாக இது செயல்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒருவர் ரூ.5000 வரை மாதந்தோறும் பென்ஷனாக பெற முடியும்.
இந்த திட்டத்தில் 18 முதல் 40 வயதுடைய நபர்கள் சேரலாம். இதில் மாதத்திற்கு ரூ.210 வீதம் தொடர்ந்து 18 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். பின்னர், ஓய்வுக்கு பிறகு ரூ.5000 மாத வருமானம் கிடைக்கும்.
நீங்கள் தம்பதிகளாக இணையும் போது இந்த தொகை ரூ.10,000 என அதிகரிக்கும். ஆனால், இதற்கு முதலீட்டாளர்கள் 60 வயது பூர்த்தி அடைய வேண்டும்.
அதாவது, தினமும் வெறும் 7 ரூபாய் வீதம் மாதத்திற்கு ரூ.210 என முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் பிரீமியம் செலுத்தும் தொகைக்கு ஏற்றவாறு பென்சன் தொகை மாறுபடும்.
இதுவே நீங்கள் மாதம்தோறும் ரூ.1000 பெற வேண்டுமானால் மாதத்திற்கு 42 ரூபாயை 18 வயதில் இருந்தே செலுத்த வேண்டும்.
இந்த திட்டத்தின் சந்தாதாரர் எதிர்பாராமல் இறந்து விட்டால், அவரின் வாழ்க்கை துணைக்கு பென்ஷன் தொகை வழங்கப்படும். ஒருவேளை இருவருமே இறந்துவிட்டால் முதலீட்டாரின் நாமினி பென்ஷன் தொகையை பெறலாம்.
இந்த திட்டத்தின் கணக்கை நீங்கள் பொதுத்துறை, தனியார் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் திறக்கலாம். அதற்கு ஆதார் கார்டு போன்ற ஆவணங்கள் தேவை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |