கடைசி நாளில் 92 ரன் விளாசிய வீரர்..டிராவில் முடித்த மேற்கிந்திய தீவுகள்
தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.
டிக்ளேர்
Trinidadயின் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில், தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.
முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 357 ஓட்டங்களும், மேற்கிந்திய தீவுகள் 233 ஓட்டங்களும் எடுத்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுக்கு 173 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 68 (50) ஓட்டங்களும், டோனி டி ஸோர்ஸி 45 (60) ஓட்டங்களும் எடுத்தனர்.
அலிக் அதனசி 92
298 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, கடைசி நாளில் 5 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்கள் எடுத்தது.
இதனால் போட்டி வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்தது. அலிக் அதனசி (Alick Athanaze) 116 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 92 ஓட்டங்கள் குவித்தார்.
தென் ஆப்பிரிக்காவின் கேஷவ் மகாராஜ் மொத்தம் 8 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |