பிக்பாஸ் வீட்டில் சர்ச்சை கருத்து.., நடிகர் விஜய்சேதுபதி மீது போலீசில் புகார்
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசனாக சுவாரசியம் குறையாமல் தொகுத்து வழங்கியவர் நடிகர் கமல்ஹாசன்.
சில தனிப்பட்ட காரணங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, பிக்பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் விஜய்சேதுபதியை தொலைக்காட்சி தேர்வுசெய்தது.
இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியம் குறையாமல் நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மீது காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளரிடம் ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகழ் பெற்ற ஆத்தங்குடி டைல்ஸ் பற்றி நடிகர் தீபக் தவறான கருத்துக்களை பதிவிட்டதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தீபக் கருத்தை ஒளி பரப்பியதால் அந்த தனியார் தொலைக்காட்சி மற்றும் தொகுப்பாளர் விஜய் சேதுபதி மீது வழக்கு பதிய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |