ஜனவரியில் விலை உயரும் Ather Rizta எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
Ather நிறுவனம் அதன் Rizta எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையை அடுத்த மாதம் விலை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான ஏத்தர் எனர்ஜி தனது புதிய மின்சார ஸ்கூட்டரான ரிஸ்டாவின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
நிறுவனம் Ather Rizta மின்சார ஸ்கூட்டர்களின் விலையை ரூ.4,000-லிருந்து ரூ.6,000 ஆக உயர்த்தப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய விலைகள் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும்.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 3 வேரியண்ட்கள் மற்றும் 7 வண்ண விருப்பங்களுடன் கிடைக்கிறது.
இதன் விலை ரூபாய் 1.10 லட்சம் முதல் ரூபாய் 1.47 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது TVS i-Cube, Ola S1 Air போன்ற மின்சார ஸ்கூட்டர்களுடன் போட்டியிடுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ather Rizta Electric Scooter