இலங்கை அணியை கதறவிட்ட பந்துவீச்சாளர்! அதிரடி முதல் சதம் விளாசி சாதனை
இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கஸ் அட்கின்ஸ்சன் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் சதம் விளாசினார்.
ஜோ ரூட் 143
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில், ஜோ ரூட் 143 ஓட்டங்கள் குவித்தார். ஏனைய வீரர்கள் ஆட்டமிழக்க, பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன் (Gus Atkinson) அதிரடியில் மிரட்டினார். சிக்ஸர், பவுண்டரி என விளாசிய அவர், டெஸ்டில் தனது முதல் சதத்தினை பதிவு செய்தார்.
Always nice to have Jacques Kallis in at no. 8 ? pic.twitter.com/HkLQ1qjmB0
— England Cricket (@englandcricket) August 30, 2024
இதன்மூலம் லார்ட்ஸில் 8வது அல்லது அடுத்த இடத்தில் களமிறங்கி சதம் அடித்த பந்துவீச்சாளர் என்ற சாதனைப் பட்டியலில் இணைந்தார்.
அட்கின்சன் சாதனை
மொத்தம் 115 பந்துகளை எதிர்கொண்ட அட்கின்சன் 4 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 118 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
The smile from Gus Atkinson says it all ? pic.twitter.com/gn7eQDvi0S
— England Cricket (@englandcricket) August 30, 2024
போட்ஸ் 21 ஓட்டங்களும், ஸ்டோன் 15 ஓட்டங்களும் எடுத்து வெளியேற இங்கிலாந்து அணி 427 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இலங்கை தரப்பில் அசிதா பெர்னாண்டோ 5 விக்கெட்டுகளும், மிலன் மற்றும் லஹிரு குமரா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
A hundred at Lord's ?
— England Cricket (@englandcricket) August 30, 2024
Truly a moment Gus Atkinson will NEVER forget ❤️ pic.twitter.com/Nth6qJOhYN
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |