ஜேர்மனியை குறிவைக்கும் ஏடிஎம் கொள்ளையர்கள்: காரணம் என்ன தெரியுமா?
ஜேர்மனியில் ஏடிஎம்களை வெடிவைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
2022-ல் மட்டும் 496 கொள்ளைகள்
ஜேர்மனியில், 2022ஆம் ஆண்டில் மட்டும், 496 இத்தகைய ஏடிஎம்களை வெடிவைத்துத் தகர்த்துக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
கடந்த மாதத்தில் மட்டுமே Ratingen என்னும் இடத்தில் இரண்டு ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
காரணம் என்ன?
ஜேர்மானியர்களைப் பொருத்தவரை அவர்கள் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதை விட, ரொக்கமாக பணம் எடுத்து செலவு செய்வதையே விரும்புகிறார்கள்.
Courtesy of Achim Blazy/Handout via REUTERS
ஆகவே, நாட்டில் ஆங்காங்கே, 53,000 ஏடிஎம்கள் நிறுவப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகளில் கூட ஏடிஎம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதைப் பயன்படுத்திக்கொள்ளும் ஏடிஎம் கொள்ளையர்கள் ஏடிஎம்களை வெடிவைத்துத் தகர்த்துக் கொள்லையடிக்கிறார்கள்.
இந்தக் கொள்ளைகளின் பின்னணியில், நெதர்லாந்தை மையமாகக் கொண்ட கும்பல்கள் இருப்பதாக பொலிசார் கருதுகிறார்கள்.
அவர்கள் ஜேர்மனியில் கொள்ளையடித்துவிட்டு நெதர்லாந்து எல்லைக்குத் தப்பியோடிவிடுகிறார்களாம்.