மன்னார் வளைகுடா பகுதியில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி- வானிலை மையம் எச்சரிக்கை
மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
அந்தமான் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடமேற்கில் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வால் டிச17 மற்றும் டிச18ல் தமிழகத்தில் மிக கனமழை முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், டெல்டா மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
அந்தமான், அதனை ஒட்டிய கடல்பகுதியில் 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |