பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் மர்ம நபர் கத்திக்குத்து தாக்குதல்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள ரயில் நிலையம் ஒன்றில் திடீரென மர்ம நபர் ஒருவர் பொதுமக்களைக் கத்தியால் தாக்கத் துவங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை நடந்த சம்பவம்
இன்று அதிகாலை, உள்ளூர் நேரப்படி 6.45 மணியளவில், பாரீஸ் மத்திய ரயில் நிலையத்தில் திடீரென ஒருவர் பொதுமக்களை கத்தியால் தாக்கத் துவங்கினார்.
அதில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
தாக்கிய நபரை சுட்டுப் பிடித்த பொலிசார்
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார், தாக்குதல் நடத்திய நபர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, அவரைக் கைது செய்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய அந்த நபரும் படுகாயமடைந்துள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gerald Darmanin தெரிவித்துள்ள நிலையில், அவர் யார், எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.