பிரான்ஸ் போர்க்கப்பல் மீது தாக்குதல்: ஹவுதி அமைப்புக்கு பிரான்ஸ் கடும் எச்சரிக்கை
ஏமனை தளமாகக் கொண்ட ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களான ஹவுதி அமைப்பினர், செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது அவ்வப்போது ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
அந்த அமைப்பிற்கு, பிரான்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல்கள்
ஏமனை தளமாகக் கொண்ட ஈரான் ஆதரவு கிளர்ச்சியார்களான ஹவுதி அமைப்பினர், செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது அவ்வப்போது தாக்குதல்கள் நடத்திவரும் நிலையில், சமீபத்தில் பிரான்ஸ் போர்க்கப்பல் ஒன்றின் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
அந்த தாக்குதல்களை பிரான்ஸ் போர்க்கப்பல் முறியடித்துள்ளது.
இஸ்ரேல் துறைமுகங்களை நோக்கிச் செல்லும் அனைத்து சரக்குக் கப்பல்களும் தாக்குதல்களுக்குள்ளாகும் என்றும் ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரான்ஸ் கடும் எச்சரிக்கை
இந்நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் குறித்து பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரான Catherine Colonna கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹவுதி அமைப்பின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்காமல் விடப்படாது என்று கூறியுள்ள அவர், இப்படி கப்பல்களின் போக்குவரத்துக்கு ஹவுதி அமைப்பினர் தொடர்ந்து இடயூறு விளைவிக்கும் நிலையில், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீதான ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களைத் தடுப்பதற்காக பல்வேறு தீர்வுகள் ஆராயப்பட்டுவருவதாகவும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரான Catherine தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |