இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு கண்டனம்... ஆனால் பாலஸ்தீனத்துக்கான உதவி தொடரும்: பிரான்ஸ் ஜனாதிபதி
இஸ்ரேல் மீதான ஹமாஸ் ஆயுதக்குழுவின் தாக்குதலை பிரான்ஸ் கண்டித்துள்ள அதே நேரத்தில், பாலஸ்தீனத்துக்கான நிதி உதவி தொடரும் என்று கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.
ஹமாஸ் ஆயுதக்குழுவின் மிரட்டலுக்குக் கண்டனம்
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய பாலஸ்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸ் என்னும் அமைப்பு, இஸ்ரேலிலிருந்து 100க்கும் அதிகமானோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளது.
காசாவிலிருக்கும் பொதுமக்கள் மீது முன்னறிவிப்பின்றி இஸ்ரேல் ஏதாவது தாக்குதல் நடத்தினால் ஒவ்வொரு தாக்குதலுக்கும் பதிலடியாக ஒரு பிணைக்கைதி கொல்லப்படுவார் என ஹமாஸ் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
Markus Schreiber/AP
ஹமாஸ் அமைப்பின் மிரட்டல் மோசமானது, ஏற்றுக்கொள்ள இயலாதது என்று கூறி அதை நிராகரித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.
பாலஸ்தீனத்துக்கு உதவி தொடரும்
பாலஸ்தீன ஆயுதக்குழுவான ஹமாஸின் தாக்குதலை கண்டித்துள்ள அதே நேரத்தில், பாலஸ்தீனத்துக்கான நிதி உதவி தொடரும் என்று கூறியுள்ளார் மேக்ரான்.
தீவிரவாதத்துக்கெதிரான போரையும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை மனிதநேய உதவிகளையும் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளார் மேக்ரான்.
AP
கடந்த ஆண்டு, பாலஸ்தீனியத்தில், ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதி, இணைக்கப்பட்ட கிழக்கு எருசலேம், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரை ஆகிய பகுதிகளில் வாழும் பாலஸ்தீனியர்களுக்காக, பிரான்ஸ் 95 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |