பிரித்தானியா கப்பல் மீது ஏவுகனை தாக்குதல்! யார் நடத்தியது? வெளிவரும் பகீர் தகவல்
இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில் பிரித்தானியா நிறுவனத்துக்கு சொந்தமான சரக்குக் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
CSAV Tyndall என்ற சரக்குக் கப்பல் மீதே ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த கப்பல் சவூதி அரேபியாவின் துறைமுகமான ஜெட்டாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜெபல் அலி செல்லும் பாதையில் தாக்தலுக்குள்ளாகியுள்ளது.
இந்த தாக்குதலில் கப்பலுக்கு பெரிய சேதம் ஏற்படவில்லை என்றும் குழுவினர் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்வடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் இஸ்ரேல் இடையே பதட்டம் நிலவி வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒருவருக்கொருவர் கப்பல்களை குறிவைத்து தாக்கி வருவதால், பிரித்தானியா கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதாவது, CSAV Tyndall கப்பல் இஸ்ரேலிய நிறுவனத்திற்கு சொந்தமானது என தவறாக எண்ணி ஈரான் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.
சமீபத்தில் வரை இஸ்ரேல் நிறுவனத்திற்கு சொந்தமானதாக இருந்த CSAV Tyndall கப்பல், தற்போது லண்டனை தளமாகக் கொண்ட மற்றொரு நிறுவனமான போலார் 5 எல்.டி.டி.க்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
CSAV Tyndall மீதான ஏவுகணை தாக்குதலுக்கு பின்னணியில் ஈரான் இருக்கக்கூடும் என்கிற சாத்தியக்கூறுகள் குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.