ஜெனீவாவில் பொலிசாரைக் குறிவைத்து பட்டாசுகள் மூலம் தாக்குதல்
சுவிஸ் மாகாணமாக ஜெனீவாவில் பல இடங்களில் பொலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்களைக் குறிவைத்து பட்டாசுகளைக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஜெனீவாவின் Cornavin ரயில் நிலையத்தில் இந்த தாக்குதல் துவங்கியுள்ளது. வழியில் சென்ற சிலர் மீது பட்டாசுகளைக் கொண்டு சிலர் தாக்குதல் நடத்த, பிறகு, Grand-Saconnex, Versoix, Thônex மற்றும் Eaux-Vives ஆகிய இடங்களில் தாக்குதல்கள் தொடர்ந்தன. குறிப்பாக பொலிஸ் வாகனங்கள் குறிவைக்கப்பட்டன.
மேலும், Servetteஇலுள்ள பொலிஸ் நிலையம் மீதும் பட்டாசுகள் வீசப்பட்டன.
சாலைகளிலும், குப்பைத்தொட்டிகளிலும் தீவைக்கப்பட, தீயணைப்பு வீரர்கள் வந்து ஆறு முறை தீயை அணைக்க நேரிட்டது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக, இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஹாலோவீன் கொண்டாட்டங்கள் சனிக்கிழமை மாலை தொடங்கிய நிலையில், கொண்டாட்டங்கள் கடைசியில் தாக்குதல்களாக முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.