மகிந்த ஆதரவாளர்களை ஏற்றி வந்த பேருந்து மீது கடும் தாக்குதல்! வெளியான வீடியோ
கொழும்பு காலி முகத்திடலில் அமைதியான முறையில் கடந்த ஒரு மாதமாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் சில அடாவடி கும்பல்களின் தாக்குதலால் இன்றைய தினம் யுத்தக் களமானது.
பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் என தெரிவித்துக் கொண்ட கும்பல் சிலர் ஆர்ப்பாட்டக் களத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை எரித்து அடித்து உடைத்து அடாவடித் தனத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் காலிமுகத்திடல் மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட மஹிந்தவின் ஆதரவாளர்கள் பயணித்த பஸ்ஸொன்று பொதுமக்களால் மடக்கிப்பிடித்து கடுமையாக தாக்கப்பட்டுள்ளது.
இதுசம்பவம் தொடர்பான வீடியோக்கள், படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.