அமெரிக்க நிறுவனம் மீதான தாக்குதல்... ஐரோப்பிய ஒன்றியத்தை சாடிய ஜே.டி. வான்ஸ், மார்கோ ரூபியோ
தங்களின் டிஜிட்டல் விதிகளை மீறியதற்காக எலோன் மஸ்க்கின் எக்ஸ் தளத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் 140 மில்லியன் டொலர் அபராதம் விதித்தது.
140 மில்லியன் அபராதம்
இந்த விவகாரம் ட்ரம்ப் நிர்வாகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் தளத்தின் மீதான உயர்மட்ட விசாரணை, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை கண்காணிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுதியின் மீதான சோதனையாகவே கருதப்பட்டது.

ஆனால், அபராதம் தொடர்பில் தகவல் வெளியாகும் முன்னரே, தணிக்கை மூலம் அமெரிக்க நிறுவனங்களைத் தாக்குவதற்கு எதிராக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் எச்சரித்தார்.
இதன் பின்னர் சில மணி நேரங்களில், 140 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனைத்தொடர்ந்து அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ தனது பங்கிற்கு தாக்குதலில் இணைந்தார்.
ஐரோப்பிய ஆணையத்தின் 140 மில்லியன் டொலர் அபராதம் என்பது வெறும் எக்ஸ் தளம் மீதான தாக்குதல் மட்டுமல்ல, இது அனைத்து அமெரிக்க தொழில்நுட்ப தளங்கள் மற்றும் அமெரிக்க மக்கள் மீது வெளிநாட்டு அரசாங்கங்களால் நடத்தப்படும் தாக்குதல் என சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

விதிகளை மீறியதாக
இதனிடையே, ஐரோப்பிய ஆணையத்தின் அறிக்கையில், DSA இன் வெளிப்படைத்தன்மை விதிகளை மீறியதற்காக எக்ஸ் தளம் குற்றவாளி என்று தெரிவித்துள்ளது.
டிசம்பர் 2023 இல் ஐரோப்பிய ஒன்றியத்தால் முதல் முறையாக DSA விசாரணையால் குறிவைக்கப்பட்ட மஸ்க்கின் எக்ஸ் தளம், ஜூலை 2024 இல் பல விடயங்களில் அதன் விதிகளை மீறியதாகக் கண்டறியப்பட்டது.

எக்ஸ் தளத்தின் இந்த விதி மீறல் என்பது பயனர்களை ஆள்மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளுக்கு ஆளாக்குகிறது, அத்துடன் தீங்கிழைக்கும் நபர்களால் செய்யப்படும் பிற வகையான கையாளுதல்களுக்கும் ஆளாக்குகிறது என்றும் உறுதி செய்யப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |