மாஸ்க் அணியச் சொன்ன உணவக ஊழியரை தாக்கிய நபர்: நீதிபதி எடுத்த முடிவு
சுவிட்சர்லாந்தில் மாஸ்க் அணியச் சொன்ன உணவக ஊழியரைத் தாக்கிய நபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சூரிச்சுக்கு அருலில் உள்ள இடம் ஒன்றில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு வந்த ஒரு 69 வயது நபர், மாஸ்க் அணியாமல் இருந்துள்ளார்.
உணவக ஊழியர் ஒருவர் அவரை மாஸ்க் அணியச் சொல்லி வற்புறுத்த, அவரைத் தாக்கியுள்ளார் அந்த நபர். அத்துடன், இந்த சம்பவத்தை தனது மொபைலில் வீடியோ எடுத்த ஒரு பெண்ணையும் அவர் தாக்கியிருக்கிறார்.
இதற்கிடையில், இதற்கு முன் அந்த நபர் மோசடி வழக்குகள் பலவற்றிலும் ஈடுப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மன நலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை ஏமாற்றி 420,000 சுவிஸ் ஃப்ராங்குகள் மோசடி செய்துள்ளார் அவர்.
ஆகவே, ஏற்கனவே குற்றச்செயல்களில் ஈடுபட்டவரான அவரை சிறைக்கு அனுப்புவதுதான் சரியாக இருக்கும் என அரசு தரப்பு வாதிட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அவருக்கு 30 நாட்கள் சிறைத்தண்டனை அளித்து உத்தரவிட்டார்.