ஏமன் மீது தாக்குதல் நடத்தியதால் பிரித்தானியாவுக்கு ஆபத்து ஏற்படலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள்
ஏமன் மீது வான்வழித்தாக்குதல் நடத்தியதால், பிரித்தானியாவுக்கு தீவிரவாத தாக்குதல் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரித்தானியாவுக்கு ஆபத்து
அமெரிக்காவுடன் இணைந்து பிரித்தானியா ஏமன் மீது வான்வழித்தாக்குதல் நடத்தியதால், பிரித்தானியாவுக்கு தீவிரவாத தாக்குதல் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்
செங்கடலில் மேற்கத்திய நாடுகளுக்குக் சொந்தமான போர்க்கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நிகழ்த்தியதைத் தொடர்ந்து, செவ்வாயன்று இரவு பிரித்தானிய போர் விமானங்கள் ஏமன் நாட்டில் அவுதி கிளர்ர்சியாளர்களின் தளங்கள் என கருதப்படும் பல இடங்கள் மீது குண்டுமழை பொழிந்தன.
Image: MOD/AFP via Getty Images
ஆனால், பிரித்தானியா, அமெரிக்காவுடன் இணைந்து ஏமன் மீது தாக்குதல் நிகழ்த்தியதால், ஜிகாதிகள் பிரித்தானியாவை அமெரிக்காவின் உதவியாளராகப் பார்க்கின்றனர்.
நம்மைப் பொருத்தவரை நம் தரப்பில் நியாயம் இருந்தாலும், மத்திய கிழக்கு பகுதியில் முரண்பாடுகளை அதிகரிப்பது, நமக்கு பாதகமாக அமையும் என்கிறார் மேற்கத்திய உளவுத்துறை நிபுணர் ஒருவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |