அது மிருகத்தனம்... வெற்றி பெறுவது இனி முடியாத செயல்: கொந்தளித்த போரிஸ் ஜோன்சன்
ரிஷி சுனக் அரசாங்கம் வரிகளைக் குறைக்கவும், உக்ரைனுக்கு அதிக ராணுவ உதவிகளை வழங்க வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார்.
போரிஸ் ஜோன்சன் நம்பிக்கை
தற்போதைய நிலையில், அடுத்த தேர்தலில் ரிஷி சுனக்கால் வெல்ல முடியும் எனவும் போரிஸ் ஜோன்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாக குறிப்பிட்டுள்ள ஜோன்சன், அதிக உறுப்பினர்களுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Credit: Rex
மேலும், பொருளாதாரம் மேம்படும், பணவீக்கம் குறையும், மக்கள் நீண்டும் தங்கள் பக்கம் திரும்பி வருவார்கள் என்று ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள போரிஸ் ஜோன்சன், ரஷ்யாவின் நடவடிக்கை மிருகத்தனமானது என்றார்.
பொதுமக்கள் மீதான தாக்குதல் ஒருபோதும் ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ள ஜோன்சன், உக்ரைனுக்கு ஆதரவாக பிரித்தானியா ராணுவ உதவிகளை அதிகமாக முன்னெடுக்க வேண்டும் என்றார்.
@reuters
புடினின் மிருகத்தனம்
விளாடிமிர் புடினின் மிருகத்தனத்தை தாம் நேரிடையாக உக்ரைனில் பார்த்ததாக கூறும் போரிஸ் ஜோன்சன், அவர் மீதான மதிப்பு குறைந்துவிட்டது என தெரிவித்துள்ளார். அவர் அதை முற்றிலும் பயங்கரவாதச் செயலாகவே செய்கிறார்.
அவர் நகரங்களைத் தொடர்ந்து அழித்து வருகிறார், அவர் முற்றிலும் இரக்கமற்றவர், அவருக்கு போர் சட்டங்கள் மீதும், மனித வாழ்க்கை மீதும் மரியாதை இல்லை என காட்டமாக பதிலளித்துள்ளார்.
@reuters
இதனாலையே, உக்ரைனுக்கு போதிய ஆதரவை நாம் அளிக்க வேண்டும் எனவும், புடின் எங்கிருந்து வந்தாரோ அங்கே அவரை திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் எந்த அளவுக்கு விரைவாக இந்த போரில் வெல்கிறதோ அந்த அளவுக்கு அது உலகிற்கு நன்மை தரும் என்றார்.
உலக பொருளாதாரம் மேம்படும், அப்பாவி மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்படும் என்றார் போரிஸ் ஜோன்சன்.